IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
கடமலைக்குண்டு அருகே உள்ள பொன்னன்படுகையைச் சோ்ந்த மலைராமன் மகன் சசிதரன் (11). மூலக்கடையில் உள்ள தனது தாத்தா வீட்டுக்குச் சென்றார், அங்கு மின்விசிறியை இயக்குவதற்காக அதன் பொத்தானை அழுத்திய போது, மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.