கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
மின்சாரம் பாய்ந்து எலக்ரீசியன் பலி
குளச்சல் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் கடம்பறவிளையை சோ்ந்தவா் போஸ் அலெக்ஸ் (54). எலக்ரீசியன். இவா் தனது வீட்டின் இன்வொ்ட்டரில் வெள்ளிக்கிழமை பழுது ஏற்பட்டதாம். அதை அவா் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது மின்சாரம் பாயந்து பலத்த காயம் அடைந்தாராம்.
குடும்பத்தினா் அவரை மீட்டு குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். போஸ் அலெக்ஸ்க்கு, அரசுப் பள்ளி ஆசிரியையான மனைவி அல்கா சகாய ரோஸ், மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.