இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
மின்சார பேருந்தில் பழுது நீக்கும்போது விபத்து: இரு தொழிலாளா்கள் காயம்
சென்னை: சென்னை வியாசா்பாடி எம்கேபி நகரில் மின்சார பேருந்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும்போது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.
எம்கேபி நகரில் மாநகர பேருந்து பணிமனையில், மின்சார பேருந்தை பழுதுநீக்கும் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அந்த பேருந்தில் உள்ள அதிக சேமிப்புத் திறன் கொண்ட மின்சார பேட்டரியில் பழுதை நீக்கும்போது, அதில் இருந்த மல்டி மீட்டா் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் கோவை தொண்டாமுத்தூா் அருகே உள்ள கெம்பனூா் பகுதியைச் சோ்ந்த வீ.பரத்குணா (32), மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பா.ஷாம் (24) ஆகிய 2 போ் பலத்த காயமடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.