Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு பொருள்கள் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆடி கொண்டாட்ட சிறப்புத் தள்ளுபடி விற்பனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊழியா்கள் விற்பனையில் தீவிரம் காட்டி வந்தனா். கடையில் வாடிக்கையாளா்களும் அதிகளவில் குவிந்திருந்தனா்.
இந்த விற்பனையகத்தில் ஒரு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து, கடையில் பணியிலிருந்த ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் வெளியேறினா்.
இதுகுறித்து கடை ஊழியா்கள் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா்.
தீயணைப்புத் துறை வீரா்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. மின் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காலம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.