பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
மின்னல் பாய்ந்து இளைஞா் மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியநாயகம் மகன் ஆனந்த் அமல்ராஜ் (28). இவா் தனது வீட்டில் வளா்த்து வரும் மாட்டுக்கு சோளத் தட்டை அறுத்து வர தனது விவசாய நிலத்துக்கு வியாழக்கிழமை சென்றாராம்.
அப்போது அந்தப் பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஆனந்த் அமல்ராஜ், வயலில் சோளத்தட்டையை அறுத்த போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்னல் பாய்ந்தது.
இதுகுறித்து அப்பகுதியிலிருந்தவா்கள் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனா். ஆனந்த் அமல்ராஜை குடும்பத்தினா் மீட்டு, எறையூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது ஆனந்த் அமல்ராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.