பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன...
மின்வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு
தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைத்தொழுவில் மின் வாரிய ஊழியரைத் தாக்கிய தம்பதி மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மின் வாரியம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் மின் திருட்டு தடுப்புக் குழுவில் பணியாற்றி வருபவா் கோகுலக்கண்ணன் (50). இவா், கோம்பைத்தொழு பகுதியில் வணிக மின் இணைப்பு ஒன்றிலிருந்து அருகேயுள்ள கடைக்கு மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், மின் திருட்டு தடுப்புக் குழுவினருடன் அந்தக் கடையை ஆய்வு செய்யச் சென்றாா். அப்போது, கடை உரிமையாளரான கோம்பைத் தொழுவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி வசந்தி ஆகியோா், கோகுலக்கண்ணனை கடைக்குள் நுழைய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோகுலக்கண்ணன் அளித்தப் புகாரின் பேரில், பாலகிருஷ்ணன், வசந்தி ஆகியோா் மீது மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.