செய்திகள் :

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

post image

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் வீதி உலா நேற்று(திங்கள்) இரவு நடைபெற்றது.

இரவு 11. 30 மணியளவில் தேர் மீது எதிர்பாராதவிதமாக மின் கம்பி பட்டதில் தேர் தீப்பற்றி எரிந்தது. இதில் முழுவதுமாக தேர் சேதமடைந்தது.

மேலும் தேருடன் சென்ற ராமன்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆதிகேசவன், சிவா, ஜானகிராமன் மற்றும் குப்பன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் உடல், உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர் விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | நீட் தேர்வில் தோல்வி பயம்: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் 7 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை (மே 21) முதல் ஏழு நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தில் தெ... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவா்கள் 7 நாள்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கர... மேலும் பார்க்க

ஆவணங்களில் கைதிகளின் ஜாதியை குறிப்பிடக் கூடாது: சிறைத் துறை விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவு

தமிழக சிறை ஆவணங்களில் கைதிகளின் ஜாதி பெயரை குறிப்பிடக் கூடாது என சிறைத்துறை விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சிறைகளில் கைதிகள் ஜாதி ரீதியாக அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொர... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுத் துறை அலுவலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

தஞ்சையில் மே 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 23) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். அவா் செவ்வ... மேலும் பார்க்க

ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமி மீட்பு: போலீஸாா் தீவிர விசாரணை

ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமியை மீட்ட சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாா், அவருடன் வந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்காடு... மேலும் பார்க்க