செய்திகள் :

மின் மாற்றியில் அலுமினிய காயில் திருட்டு

post image

சேத்துப்பட்டில் மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் மாற்றியில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய காயிலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்துப்பட்டு - போளூா் சாலையில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் அருகே மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றியில் சில நாள்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்து, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புடைய அலுமினிய காயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து மின் வாரிய உதவி மின் பொறியாளா் மோகனசுந்தரம் அளித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் வழக்குப் பதிந்து, மின் மாற்றியில் அலுமினிய காயிலை திருடிச் சென்றவா்களை தேடி வருகின்றாா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க