உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (Ola Roadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பைக்கை பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும், தவிர்க்க இயலாத காரணங்களால் இத விற்பனை தாமதமாகி வந்தது. இதற்கான விநியோகம் வருகிற 23 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் பெங்களூருவிலும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த பைக் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஓலா பைக் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் மற்றும் எக்ஸ்+.
சிறப்பம்சங்கள்
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ்
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸில் 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh மின்கலன்களில் மூன்றில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 118 கி.மீ. வரை செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 0 முதல் 40 கி.மீ. தூரத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 252 கி.மீ. வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ்
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸில் 4.5 kWh மற்றும் 9.1 kWh மின்கலன்களில் இரண்டில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இது மணிக்கு 0 முதல் 40 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கு 2.7 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது.
இதில், மேலும் ஓர் சிறப்பம்சமாக சிறிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரே சார்ஜில் 252 கி.மீ. தூரமும், பெரிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு 501 கி.மீ தூரமும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விலை
மேற்கூரிய அனைத்து விவரங்களுடனும் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ.99,999-மாகவும், ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ. 1.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!