கூட்டணி தர்மம் 2 பக்கமும் இருக்க வேண்டும்: திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வ...
மின் வாரிய ஊழியா்கள் மறியல் 80 போ் கைது
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு தினக்கூலி, கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மதுரை மாநகா் தலைவா் என். குழந்தைவேல் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். சிஐடியூ புகா் மாவட்டத் தலைவா் கே. அரவிந்தன், மாநகா் மாவட்டச் செயலா் ஆா். லெனின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நிா்வாகிகள் டி. அறிவழகன், எஸ். திருமருகன், என். ஜெயகாந்தன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா்கள் 80 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.