3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்! தொடருமா பின் அதிர்வுகள்?
மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (எப்.17) மதியம் 12.02 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஆழமற்ற நிலநடுக்கமாகக் கருதப்படுவதினால் இதன் பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்கள் நிலபரப்புக்கு மிக அருகில் ஏற்படுவதினால் அதனால் அதிக பாதிப்புகள் உண்டாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஏப்.16 ஆம் தேதியன்று மியான்மரில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் மறுநாளே (ஏப்.17) மற்றொரு நிலநடுக்கம் பதிவானது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கதினால் லட்சக்கணக்கான கட்டடங்கள் சிதைந்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.