கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மணிமேகலை தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் தெரியவந்துள்ளது.
சன் மியூசிக் இசை சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்கே உரித்தான நகைச்சுவைக் கலந்த ஸ்வாரசியத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
இவர் 15 ஆண்டுகளாக தொகுப்பாளராக உள்ளார். இவர் தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, முன்னதாக நிறைவு பெற்ற 5-வது சீசன் நிகழ்ச்சியை மணிமேகலை நடிகர் ரக்ஷனுடன் தொகுத்து வழங்கினார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!
இந்நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்ற பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியின் பாதியிலேயே இவர் விலகினார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் மணிமேகலை பங்கேற்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நடன நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார்.
விரைவில் தொடங்கவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் - 3 நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய்யுடன், மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை வரலட்சுமி, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், நடிகை ஸ்நேகா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் - 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள மணிமேகலைக்கு அவரின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.