செய்திகள் :

மீண்டும் பரவும் கொரோனா; மும்பை, பெங்களூருவில் 5 பேர் உயிரிழப்பு..

post image

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது.

மகாராஷ்டிராவில் கடந்த 10 நாள்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்தான் அதிக அளவில் கொரோனாவின் தாக்கம் இருக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு, மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக மும்பை அருகில் உள்ள கல்வா என்ற இடத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வாலிபருக்கு நீரிழிவு நோய் இருந்ததுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கல்வா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது உயிரிழந்துவிட்டார்.

கடந்த 19-ம் தேதி மும்பை கே.இ.எம் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர தனியார் மருத்துவமனை ஒன்றிலும் ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மும்பை அருகில் உள்ள தானேயில் கடந்த 4 நாள்களில் கொரோனாவால் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மும்பை சி.எஸ்.டி யில் உள்ள காமா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவை மாநில அரசு தொடங்கி இருக்கிறது.

பெங்களூருவில் 85 வயது நபர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இது தவிர பெங்களூருவில் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வார்டு

இதையடுத்து பொது இடத்தில் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் முககவசம் அணிந்து செல்லும்படி மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 66 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. குஜராத்தில் LF.7 ரக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிக பட்சமாக 273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 மாநிலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

`12 ஆண்டுகளாக பெண்ணுடன் தொடர்பு' - ஃபேஸ்புக் பதிவால் மகனை கட்சியிலிருந்து நீக்கிய லாலு பிரசாத் யாதவ்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய பெண்ணுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் படத்தில் க... மேலும் பார்க்க

``கேப்டன் சோபியா குரேஷி-க்கு நேரில் கொடுப்பேன்'' -`ஆபரேஷன் சிந்தூர்' சேலை தயாரித்த நெசவாளர் உருக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

Abraham Lincoln: ஆபிரகாம் லிங்கன் கொலை: 'ரத்தக்கறை படித்த கையுறை' ரூ.12 கோடிக்கு ஏலம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் கொலை செய்யப்பட்ட இரவில் அணிந்திருந்த உடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் லிங்கன் அறக்கட்டளைக்கு அதன் 20 ஆண்டுக்கால கடன்களை அடைக்க 7.9 மில்லியன் ட... மேலும் பார்க்க

US: விமானத்தில் அருகில் இருந்த பயணியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற பெண்.. 64 லட்சம் அபராதம்!

விமானத்தில் பயணித்தபோது முன்பின் தெரியாத பயணிக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணுக்கு $ 77,272 ( இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சமாகும்) அபராதம் விதித்துள்ளனர்.லாஸ் வேகாஸிலிருந்து அட்லாண்டா செல்லும் டெ... மேலும் பார்க்க

`எலிகள் தொட்ட தண்ணீர் மருந்து' - பிரதமர் மோடி சென்ற கர்னி மாதா கோயில் வரலாறு என்ன?

பிரதமர் மோடி நேற்று (மே 22) ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். அதற்குப் பிறகு தேஷ்னோக் பகுதியில் இருக்கும் பு... மேலும் பார்க்க

Siddharth: ``சித்துவுக்காக சிந்தூர்'' - அதிதி ராவ் ஹைதரி குங்குமம் குறித்து சித்தார்த் பதிவு!

'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் நடிகர் சித்தார்த் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதை இருவரும் உறுதிப்படுத்தி, கடந்த ஆண்டு... மேலும் பார்க்க