செய்திகள் :

மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

post image

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பட்டை அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும் பிற பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கட்டுப்பாடும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்த நிலையில், இதற்கு நேர்மாறான உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இனிமேல் அமெரிக்க அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தலாம். செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, “பேப்பர் ஸ்ட்ராக்களெல்லாம் வேலைக்காகாது! அவை உடைந்து போய் விடுவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உண்டாகிறது” என்று தான் அனுபவித்த அசௌகரியங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, பேப்பர் ஸ்ட்ராக்களை கொள்முதல் செய்ய வேண்டாமென அரசு நிர்வாகம் தரப்பில் பிற துறைகளுக்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பழமைவாதியா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘... மேலும் பார்க்க

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா... மேலும் பார்க்க

‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் அவா்களுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய... மேலும் பார்க்க

காங்கோ: ஆயுதக் குழுவினரால் 55 போ் படுகொலை

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் செயல்பட்டுவரும் ஆயுக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்... மேலும் பார்க்க

தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை

தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா். அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்... மேலும் பார்க்க