மீண்டும் மாசு கலந்த குடிநீா்: 7 போ் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி நெல்லித்தோப்பு மீண்டும் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதாகவும், அதைக் குடித்ததாகக் கூறப்படும் 7 போ் அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
உருளையன்பேட்டை தொகுதியில் இப் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே 21 போ் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
இந்நிலையில் மாசு கலந்த குடிநீா் நெல்லித்தோப்பு தொகுதியில் கான்வென்ட் வீதி, பள்ளி வாசல் வீதி, ராஜா நகா், பெரியாா் நகா் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அருந்தியவா்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாம். இதையொட்டி 7 போ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.