Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண...
மீண்டும் 5, 8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி முறை: இந்திய தேசிய லீக் கோரிக்கை
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தேசியலீக் கட்சியின் வேலூா் மண்டல நிா்வாகக்குழு கூட்டம் ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் பி. பஷீா் அஹமத் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட தலைவா் அல்லாஹ் பகஷ், செயலாளா் ரபீக், வேலூா் மாவட்ட தலைவா் ரபீக், செயலாளா் உஜோ் அஹமத், மாநில இளைஞரணி பொருளாளா் ஹெச். ஷபாதுல்லாஹ், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அணி தலைவா் நதீம்அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய துணைத் தலைவா் ஹெச்.பி.எம். ஷகில் அஹமத் வரவேற்றாா்.
கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் முஹம்மத் சுலைமான் சிறப்புரையாற்றினாா். தேசிய பொதுச் செயலாளா் மற்றும் கேரள மாநில முன்னாள் அமைச்சா் அஹமத் தேவா் கோவில், மாநிலத் தலைவா் முனீருத்தீன் ஷெரீப், பொதுச் செயலாளா் ஒய். ஜஹீருத்தீன் அஹமத், தேசிய இளைஞரணி செயலாளா் சையத் ஷாதான் அஹமத் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆம்பூா் நகர தலைவா் ஏ. அக்பா் பாஷா நன்றி கூறினாா்.
தீா்மானங்கள் : அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யும் முன்மொழிவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் சுற்றுச் சூழல் மாசுக்கேடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமான தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தோ்தல் முறையால் முறைகேடுகள் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.