செய்திகள் :

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

post image

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை என்றாலும், கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களும் அவர்களது படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறைபிடிக்கப்படும் படகுகளை இலங்கை அரசு நாட்டுடமை ஆக்குவதுடன், கைது செய்யப்படும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்களின் அழுத்தத்தினால் இலங்கை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இரு நாட்டு மீனவர்களிடையே நிலவும் மீன்பிடி பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வகையில் இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டம், வவுனியாவில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் சேசுராஜ், சகாயம், ஜஸ்டின், ஆல்வின் உள்ளிட்டோர்... இலங்கை மீனவர் சங்க நிர்வாகிகள் வர்ணகுல சிங்கம், அன்னராசா, ஜோசப் பிரான்சிஸ், ஆலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பு மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து பேசப்பட்டதுடன் அடுத்த கட்டமாக இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்கள் சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

பேச்சுவார்தையில் ஈடுபட்ட இரு நாட்டு மீனவர்கள்
பேச்சுவார்த்தை துவங்கும் முன்
பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இலங்கை மீனவர்கள்

இதனிடையே ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற ஜெர்சிஸ் என்பவரது படகினை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதில் மீன்பிடிக்க சென்ற பாக்கியராஜ், சவேரியார் அடிமை, முத்து களஞ்சியம், எபிரோன், ரஞ்சித், பாலா, யோவான்ஸ், இன்னாசி, ஆர்னாட், கிறிஸ்து, அந்தோணி ஆகிய 11 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒரு புறம் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடி பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மறுபுறம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பு மீனவர் பேச்சுவார்த்தை நடத்த விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாள... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்.... நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடந்தன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின்... மேலும் பார்க்க

`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ - நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்கை வைத்த சபாநாயகர்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பிறகு இன்று கூடியிருக்கிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் - சீமான் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், `இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப... மேலும் பார்க்க

``திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் எ... மேலும் பார்க்க

``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நரேந்திர மோடி பிரதமரானப் பிறகு முதல் முறையாக நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மையத்துக்குச் சென்றிருந்தார். இங்கு மாதவ் நேத்ராலயா ப்ரிமீயம் மையம் என்கிற கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியப் பின் மோடி உரையா... மேலும் பார்க்க