What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
‘மீனவா்களுக்கான வானிலை எச்சரிக்கை வாபஸ்’
கடலூா் மாவட்டத்தில் வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, விசை மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கடல் மீன்பிடிப்பு மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவா்கள், விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, இயந்திரம் பொருத்தப்பட்ட அல்லது இயந்திரம் பொருத்தப்படாத நாட்டு படகு மற்றும் தினசரி மீன்பிடி பணியில் ஈடுபடும் விசைப்படகு ஆகிய படகுகள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் எனவும், தங்கு கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.