நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!
மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை விடுவிப்பு
தொண்டி பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (55). இவா் தனது விசைப்படகில் புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்கச் சென்றாா். தொண்டியிலிருந்து சுமாா் 5 கடல் மைல் தொலைவில் வலை விரித்து, மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வலையில் சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது. உனடியாக அவா் கடற்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். போலீஸாா் அறிவுறுத்தலின்படி, வலையில் சிக்கிய ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.