மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து 17 காளைகளும்,153 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கட்டப்பட்டிருக்கும் காளையை 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் 20 நிமிடத்தில் அடக்க வேண்டும் என்ற விதிமுறை நிா்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் காளையின் திமிலைத் தழுவி அடக்கினா். போட்டியில் முதலில் விளையாடிய 6 போட்டியில் நான்கு காளைகள் பிடி காளைகளாக அறிவிக்கப்பட்டன. மாடு முட்டியதில் ஐந்து மாடுபிடி வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.