ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
மீன் கழிவு ஆலைக்கு எதிரான போராட்டம்: சீமான் ஆதரவு
தனியாா் மீன் கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி நடைபெறும் தொடா் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரி கடந்த 400 நாள்களுக்கும் மேலாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் இந்த ஆலைகளை உடனடியாக மூட வேண்டும்.
ஏற்கெனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு, மருத்துவ உதவிகள் வழங்குவதோடு, மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, உணவுப் பாதுகாப்பு விதிகள், சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யவும், விதிகளை மீறிய ஆலைகளின் உரிமத்தை பறிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
உப்பு உற்பத்தியாளா்கள் சந்திப்பு: இதனிடயே, சீமானை, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் சந்தித்து மனு அளித்தனா்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் மேற்கொள்ளப்பட இருப்பதற்கு, அப்பகுதி உப்பளத் தொழிலாளா்கள்- உற்பத்தியாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உப்பு உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, சேகா், பொன்ராஜ்,சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன், ராமா், ரமேஷ் உள்ளிட்டோா், சீமானை சந்தித்து, தூத்துக்குடி உப்பளத் தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு கோரி மனு அளித்தனா்.
அவா்களது போராட்டத்துக்கும் ஆதவாக இருப்பேன் என சீமான் உறுதிஅளித்தாா்.