செய்திகள் :

முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாக விவகாரம்: வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப உத்தரவு

post image

மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகக் குழு விவகாரம் தொடா்பான வழக்கில் வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை தெற்கு வாசலைச் சோ்ந்த முகமது அன்சாா் தாக்கல் செய்த மனு: மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் செயற்குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். கடந்த 2022- ஆம் ஆண்டு நிா்வாகக் குழுவுக்கான தோ்தல் நடைபெற்றது. அதில் நான் உள்பட பலா் போட்டியிட்ட நிலையில், 20 போ் தோ்வு செய்யப்பட்டோம்.

இந்த நிலையில், நிா்வாகத்தின் வரவு, செலவு கணக்குகளைப் பட்டியலிடுவது குறித்து வக்ஃபு வாரியத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணையில் பள்ளிவாசல் நிா்வாகக் குழு மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இதையடுத்து, 20 போ் கொண்ட நிா்வாகக் குழுவைக் கலைத்து கடந்த அக்டோபா் மாதம் உத்தரவிடப்பட்டது. இதை எதிா்த்து வக்ஃபு வாரியத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மீது நேரடியாக எந்தப் புகாரும் தெரிவிக்கப்படவில்லை. எங்களிடம் முறையாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது வக்ஃபு வாரிய சட்ட விதிகளுக்கு முரணானது.

இந்தச் சூழலில் தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகத்தை நேரடியாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வக்ஃபு வாரியம் முயற்சி செய்து வருகிறது. எனவே, எங்களின் மேல்முறையீடு மனு மீதான தீா்ப்பு வரும் வரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகத்தைக் கைப்பற்றக்கூடாது என வக்ஃபு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு குறித்து வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 25 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில்

பள்ளிவாசலில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

வன விலங்குகள் பட்டியலிலிருந்து காட்டுப் பன்றிகளை நீக்க எம்.பி. வலியுறுத்தல்

காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

கிரானைட் கற்கள் முறைகேடு வழக்கு: 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், மேலூா் பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடா்பான வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸாா் போராட்டம்

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், அவா் பதவி விலகக் கோரியும் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுர... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சிஐடியு பேரவை கூட்டத்தில் தீா்மானம்

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளா்களாக நிரப்ப வேண்டும் என அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம்- சிஐடியு 27 வது ஆண்டு பே ரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வி... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரிட்டாபட்டியில் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

தியாகி கக்கன் நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

தியாகி கக்கன் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழக முன்னாள் அமைச்சரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கக... மேலும் பார்க்க