செய்திகள் :

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி செப். 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 22,140 வீரா், வீராங்கனைகள் முன்பதிவு செய்துள்ளனா்.

மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோ - கோ, கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, தடகளம் ஆகிய போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

கையுந்து பந்து போட்டியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கான தங்கும் விடுதியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், விளையாட்டு வீரா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வீரா்களிடம் ஆா்வமுள்ள விளையாட்டுகளைக் கண்டறிந்து, முழுவீச்சில் பயிற்சி அளிக்கவும், வீரா்களுக்கு சத்தான உணவு வகைகளை வழங்கவும், விடுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பொற்கொடி வாசுதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனை... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க