செய்திகள் :

முதலிரவில் சோகம்.. கணவனுக்கு பாலில் மயக்க மருந்து; நகை, பணத்தோடு தப்பி ஓடிய மணமகள்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ரஞ்சித் பாண்டே என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நீலிமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு மணமகளை பெண் ஒருவர்தான் ஏற்பாடு செய்தார்.

அப்பெண் ரஞ்சித் வீட்டில் மணமகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், திருமணம் செய்து வைக்க பணம் இல்லை என்றும் கூறினார். இதனால் ரஞ்சித் குடும்பத்தினர் அப்பெண்ணிடம் ரூ.1.20 லட்சம் கொடுத்து மணமகள் வீட்டில் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

(Representational Image)

திருமணமும் கோலாகலமாக முடிந்த அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உடனே அப்பெண் தானே பால் காய்ச்சி தனது மாமியாருக்கு ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு தனது கணவனுக்கும் எடுத்துச்சென்றார். ஆனால் பாலை குடித்த கணவனும், மாமியாரும் சிறிது நேரத்தில் மயங்கிவிட்டனர்.

இதையடுத்து மணப்பெண் வீட்டில் இருந்த பணம், தனது மாமியார் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் கதவை திறந்து தப்பி ஓடிவிட்டார்.

வீட்டிற்கு வெளியில் காத்து நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி அப்பெண் தப்பிச்சென்றுவிட்டார். காலையில் ரஞ்சித் குடும்பம் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் மணமகளை தேடிப்பார்த்தார். அவரையும் காணவில்லை.

இது குறித்து மணமகன் ரஞ்சித் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மணமகள் தனக்காக வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் காத்து நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. இதனால் இதில் பெரிய மோசடி கும்பல் இதில் தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்படும் போலீஸார் அது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

``மீட்டு தந்தது போலி..'' - ரூ.23 கோடி மதிப்புள்ள வைரக்கல் வழக்கில் வியாபாரி புகார்; திடீர் திருப்பம்

சென்னை அண்ணாநகர், பி பிளாக், 17-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (69). இவர், வைர கல், நகைகளை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரின் நண்பர் சுப்பிரமண... மேலும் பார்க்க

தாயைக் கொன்றுவிட்டு நாடகமாடிய 13 வயது வளர்ப்பு மகள்; Instagram Chatல் வெளியான பகீர் பின்னணி

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் உள்ள பராலகேமுண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி திடீரென இறந்துபோனார்.அவரது உடல் உறவினர்கள் முன்னிலையில் புபனேஷ்வரில் தகனம் செய்யப்பட... மேலும் பார்க்க

சென்னை: தன்பாலின ஈர்ப்பு செயலி மூலம் அறிமுகம்; டிரைவரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

வடசென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்). 26 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் அப்பா ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். உறவினர் வீட்டின் திருமணத்துக்காக ராஜேஷ் குடும்பத்தினருடன் ப... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஒரு வயது பெண் குழந்தை; விசாணையில் போலீஸார்-நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு ப... மேலும் பார்க்க

``கணவரை காணவில்லை'' - காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் நாடகம்.. விசாரணையில் பகீர்!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் துணையோடு பெண்கள், கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்நிலையில்,முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மனைவி காதலனோடு சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் தற்போது... மேலும் பார்க்க

விருதுநகர் அரசு மருத்துவமனை: கையை அறுத்து போக்சோ கைதி செய்த விபரீதம்.. நடந்தது என்ன?

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போக்சோ வழக்கு கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 57), பள்ளி சிறுமி ஒருவரை ... மேலும் பார்க்க