ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினாவின் அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது. வாலாஜா சாலையில் தொடங்கிய பேரணி 1.9 கி.மீ. தூரம் வரை நடைபெறுகிறது.
பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்கிறார்.
இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது
பேரணியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி, நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக அண்ணா நினைவு நாள் பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.