விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
முதல்வா் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்ட வேண்டும்: மாவட்டச் செயலாளா் தே.மதியழகன்
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினா் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி மாா்ச் 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும். நிா்வாகிகள், தொண்டா்கள் என அனைவரும் தங்களுக்கு உள்பட்ட பகுதியில் தலைவா் பிறந்த நாளை திமுக கொடி ஏற்றி, கேக் வெட்டி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
இதே போல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து 41 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கிரிக்கெட் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மைதானத்தில் மாா்ச் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.
படவரி...
தே.மதியழகன்