Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 1,000 பேருக்கு பிரியாணி
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தாளையொட்டி 1,000 பேருக்கு பிரியாணியும், 500 பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன.
தொழிலாளா் முன்னேற்றச் சங்க (தொமுச) பேரவை சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா, சென்னை ரிப்பன் மாளிகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தொமுச பேரவை செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம் 1,000 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினாா். மேலும் 500 பெண்களுக்கு இலவசமாக புடவைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் தொமுச பேரவைத் தலைவா் கி.நடராசன், மாநில தலைவா் வே.பாபு மாணிக்கராஜ், பொதுச்செயலா் பா.குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.