சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்பு!
முதல்வா் ஸ்டாலின் - சீமான் சந்திப்பு: மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல்!
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது சகோதரா் மு.க.முத்து மறைவுக்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆறுதல் தெரிவித்தாா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த சீமான், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தேன். கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட பாசம் மற்றும் மனித மாண்பின் அடிப்படையில் முதல்வரைச் சந்தித்தேன்.
அரசியலில் விமா்சனம் செய்வது வேறு, ஒருவா் மீது உள்ள தனிப்பட்ட மரியாதை என்பது வேறு.
வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக அல்லது திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படும் நிலையில்தான், கூட்டணி ஆட்சியை வலியுறுத்த முடியும்.
எனவே, அரசியல் தலைவா்கள் கூட்டணி ஆட்சி குறித்து பேசுவதை விட்டுவிட்டு, மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பேச வேண்டும் என்றாா்.