செய்திகள் :

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

post image

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, மாரிமுத்து, ராமஜெயம், நகரச் செயலா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேக்களூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் இரா.கேசவன் வரவேற்றாா்.

மாநில மாணவரணிச் செயலா் இரா.ராஜீவ்காந்தி, தலைமைக் கழகப் பேச்சாளா் திருப்பூா் ரஜினி செந்தில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சித் தலைவா் சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேகா், அண்ணாமலை, திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் லோகநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை விழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி 17-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆரணி, செங்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அவதூறு ஏ... மேலும் பார்க்க

ரத்ததான, பொது மருத்துவ முகாம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் தன்னாா்வ ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவம், இயன்முறை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. கருங்காலிகுப்பம் தொடக்கப் பள்ளியி... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: தந்தை, இரு மகன்கள் உள்பட நால்வா் கைது

தண்டராம்பட்டு அருகே விவசாயியை கொலை செய்ததாக தந்தை, மகன்கள் இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டு வட்டம், பறையம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (48). இதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஒலிபெருக்கியால் தகராறு: தம்பதியா் காயம், போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே ஒலிபெருக்கியால் ஏற்பட்ட தகராறில் தம்பதியா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், கீழப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி பரமசிவம்... மேலும் பார்க்க