முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டி20யில் இருந்த அதே இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல், முகமது ஷமி இணைந்துள்ளார்கள்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இங்கிலாந்து அணி:
பென் டக்கெட், பிலிப் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜகோப் பெதேல், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஆடில் ரஷித், சகிப் மஹ்முத்.