செய்திகள் :

முதல் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

post image

பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியவுடன், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்டர்கள் திணறினர்.

238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தனர்.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இதையும் படிக்க : ரிஷப் பந்த்தை ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னௌ: முதல்நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்!

ஸ்கோர் விவரம்

முதல் இன்னிங்ஸ்

இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி - 41, ரிஷப் பந்த் - 37 ரன்கள். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் - 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் - 26 ரன்கள். இந்திய அணியின் பும்ரா - 5, ஹர்ஷித் ரானா - 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியாவின் நாதன் லயான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89, மிட்செல் மார்ஷ் 47 ரன்கள். இந்தியாவின் சிராஜ், பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

7 ரன்னில் ஆல்-அவுட் ஆன ஐவரிகோஸ்ட்! டி20 வரலாற்றில் மிக மோசமான ஸ்கோர்!

நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஐவரிகோஸ்ட் அணி வெறும் 7 ரன்னில் ஆல் அவுட் ஆகி மிக மோசமான சாதனையை படைத்தது.ஐசிசி டி20 உலகக் கோப்பை குவாலிஃபையர் குரூப் சி ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மி... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை, நமக்குதான் அவரது ஆதரவு தேவை: ஜஸ்பிரித் பும்ரா

விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ... மேலும் பார்க்க

ஏலத்தில் விற்கப்படாமல் போன நட்சத்திர வீரர்கள்!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான நட்சத்திர வீரர்கள் பலர் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சிய... மேலும் பார்க்க

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்... மேலும் பார்க்க

மீண்டும் சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரண்!

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன... மேலும் பார்க்க

பிரபல ஆப்கன் சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

பிரபல ஆப்கன் சுழற்பந்துவீச்சாளரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்தின் முதல் நாளான இன்று பல்வேறு ந... மேலும் பார்க்க