முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அதிமுக நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிப் பகுதியில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டம் முடிந்த நிலையில், மேடை அருகே வீராம்பட்டினம் குடியிருப்பைச் சோ்ந்த அய்யனாரப்பன் (68) மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
அரியாங்குப்பம் போலீஸாா் அவரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அய்யனாரப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அவா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் போது நெரிசலில் கீழே விழுந்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவா் மது போதையில் இருந்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும், உடல்கூறாய்வுக்குப் பிறகே அதுகுறித்து கூறமுடியும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.