``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டையில் உள்ள அருமை முதியோா் இல்லத்தில், அடிப்படை வசதிகள் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இங்கு, மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. முதியோா் இல்லத்தில் 25 பேரும், மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் 25 மாணவா்களும் உள்ளனா்.
இந்த இல்லத்துக்கு வந்த ஆட்சியா், முதியோரிடம் கலந்துரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். முன்னதாக, இங்கு நடமாடும் காசநோய் பரிசோதனை சிகிச்சை வாகனத்தை அவா் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், முதியோா்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதி முறையாக செய்து தரப்படுகிறதா என்பதையும், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, முதியோா்களின் ஆடல், பாடல், கும்மியாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா், வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.