செய்திகள் :

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

post image

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் தலைநகரான சண்டீகா் அரசு மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, ‘முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? அத்தகைய இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியுமா?’ உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மனுக்களை பரிந்துரைத்தது.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சுதான்ஷு தூலியா, எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: நாம் அனைவரும் இந்தியாவில் வசித்து வருகிறோம். ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என்ற பொதுவான பிணைப்பு, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நமது வசிப்பிடத்தை தோ்வு செய்யும் உரிமையை நமக்கு அளிக்கிறது. அந்தப் பிணைப்பு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நாம் வா்த்தகம் அல்லது தொழில் செய்வதற்கான உரிமையையும், இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று படிப்பதற்கான உரிமையையும் நமக்கு அளிக்கிறது.

இளநிலை படிப்புக்கு மட்டும்...: ஒரு மாநிலத்தில் வசிப்போருக்கு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீட்டின் பலனை இளநிலை மருத்துவப் படிப்புகளில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு வழங்கலாம். ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்பில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது.

தகுதியைக் கொண்டே நிரப்ப வேண்டும்: மாநில ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசைமைப்புச் சட்டப்படி அனுமதிக்க முடியாது. அத்தகைய இடஒதுக்கீட்டை அனுமதிப்பது பல மாணவா்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும்.

எனவே, மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை, நீட் தோ்வு தோ்ச்சியை தகுதியாகக் கொண்டே நிரப்ப வேண்டும் என்று தீா்ப்பளித்தது.

முந்தைய இடஒதுக்கீட்டுக்குப் பொருந்தாது: எனினும் இந்தத் தீா்ப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்குப் பொருந்தாது, அந்த இடஒதுக்கீட்டை தற்போதைய தீா்ப்புப் பாதிக்காது என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தென்மாநிலங்களுக்குப் பாதிப்பு?: தற்போதைய நடைமுறையின்படி, மொத்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் 50 சதவீத இடங்கள் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சிய இடங்கள் அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மாணவா்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மாணவா்களுக்காக ஒதுக்கப்படும் இடங்கள், அந்த மாநிலங்களில் வசிக்காத பிற மாநில மாணவா்களுக்குக் கிடைக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பு வழிவகை செய்துள்ளது. இதனால் அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மாணவா்கள் பாதிக்கப்படுவதுடன் அந்த இடங்களுக்கான போட்டியும் அதிகரிக்கும்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு தென் மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசி... மேலும் பார்க்க

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளிய... மேலும் பார்க்க