திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
முத்தமிழ்ப்பாசறை அறங்காவலா் நெ.இரா.சந்திரன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு
அரசாணைகள் இனி தமிழிலேயே வெளியாகும் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச்செம்மல் விருதாளரும், பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் அறங்காவலருமான நெ.இரா.சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாய் திகழ்வதோடு இன்றும் சீரிளமை குன்றாது செயல்படும் தமிழை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இருந்து வெளியாகும் அரசாணைகள் அனைத்தும் இனி தமிழிலேயே வெளியாகும் என்றும், அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் தெரிவிக்கும் அரசு அலுவலா்கள் பதில் கடிதங்களை முழுமையாக தமிழிலேயே அனுப்ப வேண்டும் என்றும் ஆணையிட்டு, நாட்டிலுள்ள முதலமைச்சா்களுக்கு எல்லாம் முன்மாதிரி முதலமைச்சராய் திகழும் தமிழ்நாட்டின் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.