முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிகமாக வெற்றி பெறும் இரண்டு அணிகள் பிப்.14ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்தப் போட்டிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நடத்தப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியில் ஜெரால்டு கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா அணித் தலைவராக செயல்படுகிறார்.
கிளாசன், கேசவ் மஹாராஜ் பிப்.9ஆம் தேதி அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எஸ்ஏ 20 பிப்.8ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஈதன் போஷ், மேத்திவ் ப்ரிட்ஜிக், ஜெரால்டு கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்தர், மிஹ்லாலி போங்வானா, செனுரன் முத்துசாமி, ஜிடியோன் பீட்டர்ஸ், மீக-ஈல் பிரின்ஸ், ஜேசன் ஸ்மித், கைல் வெர்ரைன்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் பிப்.19ஆம் தேதி தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
SQUAD ANNOUNCEMENT
— Proteas Men (@ProteasMenCSA) February 5, 2025
Proteas Men’s white-ball head coach Rob Walter has provided an update on the squad for the upcoming tri-nation One-Day International (ODI) series against Pakistan and New Zealand, scheduled from 08 - 14 February in Lahore and Karachi.
Walter has named… pic.twitter.com/nKVWeweWj3