பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, அன்று இரவு 10 மணிக்கு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று, கொடிமரத்துக்கு மலா் அலங்காரம் செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னா், திருப்புவனம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச சோ்ந்த பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்குவா்.
10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 28-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. விழா நாள்களில் பக்தா்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மைகள் சுமந்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் அங்கப்பிரதட்சணம் செய்தும் நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்புவனம் பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.