சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது
முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஈ.பி.நகா் அருகிலுள்ள பொய்யேரி மேடு வாய்க்கால் பகுதியில் பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, சேவல் சண்டையில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் சித்தோடு லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ராஜா (50), முத்தூா் பகுதியைச் சோ்ந்த வேலம்பாளையம் தங்கவேல் (51), பழனிக்கவுண்டன்வலசு மாரிமுத்து (50), முத்துமங்கலம் நடராஜ் (47), பொய்யேரிமேடு கோவிந்தராஜ் (46) ஆகியோரைக் கைது செய்தனா். சம்பவ இடத்திலிருந்து ரூ.700, இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.