செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `இப்போ எதிரேதானே இருக்கோம். ம்.. வெட்டு பார்ப்போம்' | அத்தியாயம் 11

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

இனிமேலும் அந்த இளவரசனை விட்டு வைக்கக் கூடாது தோழர்! " என்று தன்னுடன் இருந்தவர்கள் பொங்கியபோது, உடனே பதில் சொல்லாமல் யோசித்தார் ராமசாமி. பிறகு, " அதையெல்லாம் பற்றி இப்போ யோசிக்கவே வேண்டாம். நம்ம ஆள் ஒருத்தன் அவங்ககிட்டே மாட்டிக்கிட்டு இருக்கான். அவன் பத்திரமா வெளியே வரட்டும்.... அதுவரைக்கும் பொறுமையா இருக்கணும் " என்றார் தர்மராஜா பற்றிக் கவலைப்பட்டபடி. அதேசமயம்....

மேல்நெடுவாய் கிராமத்தை ஒட்டிய முந்திரிக்காட்டின் நடுவே ஒரு குடிசை... மூங்கிலால் பிணைத்திருந்த படல் கதவைத் திறந்தால்.. உள்ளே ஒரு ஆளைக் கட்டிப் போட்டிருந்தார்கள். கால்கள் இரண்டையும் சேர்த்து ஒரு கட்டு... இரண்டு கைகளையும் முதுகுப்புறமாய் கொண்டுபோய் சேர்த்து ஒரு கட்டு.... வாயைத் திறந்து கத்தக்கூடத் திராணியில்லாமல் சோர்ந்துபோய் தரையில் கிடந்த அவர்தான் தர்மராஜா. சுற்றிலும் நான்கு பேர் அரிவாளோடு அவருக்குக் காவல் இருந்தார்கள். சோர்ந்து கிடக்கும் தர்மராஜா கொஞ்சம் தெம்பு வந்து,


' அய்யோ! ' என்று கத்த ஆரம்பிக்கும் போதெல்லாம் நான்கு பேரும் அவரைச் சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையால் தாக்குவார்கள். " சொல்லுடா... எங்கெங்கே எல்லாம் போய் என்னவெல்லாம் கொள்ளையடிச்சீங்க? எல்லாப் பழியையும் இளவரசன் பேர்ல போடப்பாக்குறீங்களா?" என்று கேட்டவாறுதான் அடி விழும்.

" அதெல்லாம் ஒண்ணுமில்லைடா... என்னை விடுங்கடா " என்று தர்மராஜா கதறுவதை அவர்கள் சேட்பதாக இல்லை.

அடியெல்லாம் வாங்கி மயக்கமாகி சரிந்ததும்தான், உருட்டுக் கட்டை பிரயோகத்தை நிறுத்துவார்கள். பகல் முழுக்க இந்த சித்ரவதை.... இரவானதும் அந்தக் குடிசையின் நடுவே கூரையைத் தாங்கிக் கொண்டு பூமிக்கும் மோட்டுவளைக்குமாய் நிற்கும் தைலமரத் தூணில் தர்மராஜாவை சங்கிலியால் பிணைத்துக்கட்டி விடுவார்கள். ராத்திரி முழுக்க நின்றாக வேண்டும். உட்கார முடியாதபடி இறுக்கமாய் கட்டியிருப்பார்கள். நின்று நின்று கால் தளர்ந்து விடும்.- அடி, உதை சித்ரவதையே பரவாயில்லை என்றாகி விடும். நான்கு நாட்கள் கழித்து வந்த வெள்ளிக்கிழமை.. அன்று காலை வல்லம் கிராமத்தில் ராமசாமிக்கு தெரிந்த பையன் ஒருத்தனுக்கு கல்யாணம். ரொம்ப மரியாதையாய் வந்து முகூர்த்தப் பத்திரிகை எல்லாம் வைத்து கூப்பிட்டிருந்தான். ஆனால் தனக்கும், இளவரசனுக்கும் மோதல் இருக்கும் சூழலில் பொது நிகழ்ச்சியான கல்யாணத்துக்கு போகலாமா, வேண்டாமா என்று யோசனையில் இருந்தார் ராமசாமி..

காலை ஏழரை மணி இருக்கும்... வல்லத்திலிருந்து வேறொரு பையன் அவரைப் பார்க்க வந்தான் இப்போதுதான் புதிதாய் அவரோடு சேர்ந்த பையன். வாசலிலேயே தயங்கி நின்ற அந்தப் பையனை உள்ளே கூப்பிட்டு விவரம் கேட்டார் ராமசாமி!

"ஒண்ணுமில்லைண்ணே! காலையில இளவரசன் ஒரு ஆள் மூலமா தகவல் சொல்லி அனுப்பிச்சாரு.... இன்னிக்கு நீங்க கல்யாணத்துக்கு வரும்போது அங்கேயே பேசி தர்மராஜாவை உங்ககிட்டே ஒப்படைச்சிடறாராம். நீங்க கல்யாணத்துக்கு வருவீங்களானு கேட்டாங்க. "

'தர்மராஜாவைத் திருப்பித் தரப் போகிறார்கள் ' என்ற விஷயத்தைக் கேட்டதும் தயக்கமெல்லாம் பறந்து, கிளம்பத் தயாராகி விட்டார் ராமசாமி.


எப்போதும் அரண் போட்ட மாதிரி உடன் வருபவர்கள் யாரும் அன்று அவருடன் வரவில்லை. ஆதிமூலம், சின்னத்தம்பி இரண்டு பேரில் யாராவது ஒருவர் எப்போதும் ராமசாமி கூடவே இருப்பார்கள். ' நாம் பார்த்து வளர்ந்தவன்தானே இந்த இளவரசன்.... நம்மை என்ன செய்துவிட முடியும்! ' என்ற அசட்டுத் துணிச்சலோடு கிளம்பிவிட்டார்.


" பைக்குல ஏறி உட்காருப்பா! " என்று வல்லத்திலிருந்து வந்த அந்தப் பையனையும் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு கிளம்பினார். பத்து நிமிடப் பயணத்தில், வல்லம் வந்து விட்டது. இளவரசன் மற்றும் அவரது உறவுக்கார ஆட்களின் வீடுகள் இருக்கும் மேலத்தெரு வழியாகத்தான் ஊருக்குள் நுழைய வேண்டும். மேலத்தெரு வளைந்து திரும்பும் இடத்தை பைக் எட்டியபோது, மூலை வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நடுத்தர வயது ஆசாமி, " சாப்பிட்டுட்டுப் போயேன் ராமசாமி! " என்று வாஞ்சையோடு அழைத்தார். " கல்யாணத்துக்குப் போறேன் மாமா... அங்கேயே சாப்பிட்டுக்கறேன். அத்தை வடிச்சதை நீங்களே தின்னு அவஸ்தைப்படுங்க "

ஜாலியாகச் சொல்லிவிட்டு பறந்தார் ராமசாமி. வல்லம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொஞ்சம் முன்னால் திரும்பும் ரோட்டில் பைக்கைத் திரும்பினார். வளைவில் ராமசாமியின் வருகைக்காக காத்திருந்த மாதிரி ஏழுபேர் ரோட்டை மறித்து நின்றிருந்தார்கள். ராமசாமி பைக்கின் வேகத்தைக் குறைத்ததுமே சுற்றி வளைத்துக் கொண்டார்கள். ஒருவன் அவசரமாய் பைக்கின் முன்புறம் கைவைத்து இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, சாவியைப் பிடுங்கி வானத்தில் ஒரு முறை தூக்கிப்போட்டுப் பிடித்து, தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான். ராமசாமி திரும்பிப் பார்த்தார். அவரோடு பைக்கில் உட்கார்ந்துவந்த பையன் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான். ராமசாமிக்கு புரியவில்லை.

" என்னங்கடா... எதுக்குடா மறிக்கறீங்க.... விடுங்க! " என்றார். அவர்கள் அமர்த்தலாய் சிரித்தார்கள்.

“ என்னடா! எத்தனை ' டா'தான் போடுவே. எல்லாத்தையும் இப்பவே போட்டுக் கூப்பிட்டுக்க. இன்னிக்குதான்னு உனக்குத் தேதி குறிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நேரம்தானே பேசப் போறே " என்றான் ஒருவன். ராமசாமிக்கு உள்ளுக்குள் ' சொரேர் ' என்றது. ஆனாலும் பயத்தை வெளிக்காட்டாமல், “ எனனங்கடா! என்னவோ ' தர்மராஜாவைக் கூட்டியாந்து தரப்போறோம்'னு சொல்லி அனுப்பிட்டு என்னென்னவோ பேசறீங்களே? " என்று சத்தமாகவே கேட்டார்.

" தர்மராஜாவா? " கேட்டவாறே சத்தமாய் சிரித்தான் ஒருவன். " செத்துப் போனவன் உனக்கெதுக்கு ராமசாமி? தர்மராஜா செத்து இன்னியோட ரெண்டு நாளாச்சு. நீ நேரா போய் பார்த்தாக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. மூஞ்சி பூராவும் அரிவாளால கீறிக்கீறி.. பாவம்... ரொம்ப வீங்கிப் போயி அடையாளம் தெரியாமத்தான் செத்துப் போயிட்டான். நேற்றைக்கு தூக்கிட்டுப் போயி விக்கிரமங்கலத்துல போட்டுட்டோம். பாவம்.... அநாதைப் பிணமா கிடக்கிறான். எடுத்து புதைக்கவோ... பால் ஊத்தவோ ஆள் இல்லாத அநாதைப் பிணம்.. இதையெல்லாம் கேட்டதும் உனக்கு ரத்தம் கொதிக்குது இல்லையா...? சொன்ன பேச்சைக் கேட்காம இப்படி பண்ணிட்டோமேன்னு கோபம் வருது இல்லையா...? என்ன பண்றது..... அவனால நாலு நாள் சித்ரவதையைக் கூடத் தாங்கிக்க முடியலை.


என்ன சொல்லியிருந்தே? தர்மராஜாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க தலையெல்லாம் கரு ஒட்டியிருக்காதுன்னுதானே சொன்னே... இப்போ எதிரேதானே இருக்கோம். ம்.... வெட்டு பார்ப்போம் " அவன் பேசிக்கொண்டே போக, பக்கத்திலிருந்த இன்னொருவன், அரிவாள் ஒன்றை ராமசாமியின் கையில் திணிக்கிற மாதிரி அருகில் வந்தான்.

ராமசாமிக்கு என்ன செய்வது என்று குழப்பம். விளையாடுகிறார்களா அல்லது முடிவெடுத்துவிட்டேதான் பேசுகிறார்களா என்பதும் தெளிவாகவில்லை. இருந்தாலும் அந்த அரிவாளை கைநீட்டி வாங்கப் போனார். சரியாய் அதே நேரம்.... ராமசாமிக்கு நேர் பின்னாலிருந்த ஒருவன், ராமசாமியின் கழுத்திலேயே நேராய் அரிவாளைப் பாய்ச்சினான்.

' ஓ'வென பெருங்குரலெழுப்பியவாறே சரிந்தார் ராமசாமி. ஆழமாய் விழுந்த வெட்டிலிருந்து ரத்தம் பொங்கிவர, கழுத்தைக் கையால் பிடித்தவாறே எழ முயன்றார்.

மேலும் சலசலக்கும்..!

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : " `எல்லாரும் தனியாவே மாட்டிக்கிட்டுச் சாகறீங்களே?’ | அத்தியாயம் 13

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொலை... கோபம்... பழிக்குப் பழி’ | அத்தியாயம் 12

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `முந்திரிக்காடு ஏலமும் பழிக்குப்பழி மோதலும்’ | அத்தியாயம் 10

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொள்கை முழக்கத்தோடு துவங்கிய இயக்கம்... அன்று’ | அத்தியாயம் 9

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தேர்தல் வந்துவிட்டாலே போதும்...’ | அத்தியாயம் 8

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அடையாளம் தெரிஞ்சாதானே வம்பு...?’ | அத்தியாயம் 7

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க