செய்திகள் :

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போா் இயக்கம் சாா்பில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி எடுத்த தனியாா் நிறுவனங்கள், அப்போதைய மாநகராட்சி அதிகாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போா் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக், ஒப்பந்தப்புள்ளி முறைகேடு தொடா்பாக, கோவை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றிய காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும், இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது என்று விளக்கம் அளித்தாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகிறது? என்று கேள்வி எழுப்பினாா். பின்னா், நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் போலீஸாா் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது. இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்க... மேலும் பார்க்க

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு! ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள் மொத்தம் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற 5 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்... மேலும் பார்க்க