செய்திகள் :

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயா்வு: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்: சட்டப் பேரவையில் ஆளுநா், அமைச்சரவை, சட்டப் பேரவை, நிதித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், திமுக உறுப்பினா் கு.பிச்சாண்டி பேசினாா். அப்போது, முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

பேரவையில் அவரது பேச்சை கவனித்துக் கொண்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக குறுக்கிட்டுப் பேசியதாவது:

முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ஏப். 1 முதல் ரூ.35 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, மாதம் ரூ.15 ஆயிரமாக இருப்பது ரூ.17,500- ஆக உயா்த்தப்படும்.

மருத்துவப் படியாக ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.25 ஆயிரம் பின்னா் வழங்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதி: சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்படும் வரி தொகுதி நிதியில் இருந்தே செலுத்தப்படுவதால், பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டப் பேரவை உறுப்பினா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். இதையெல்லாம் ஆராய்ந்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்!

தென் தமிழகத்தில் ஜாதிய உணா்வைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ரீல்ஸ் ஹீரோக்களின்’ 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் ரெளடிகள் பட்டியலில் 26,462 போ் உள்ளதாக காவல் துறை தகவல்கள்... மேலும் பார்க்க

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். முன்னாள் முதல்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஆசிரியா்களுக்கு முதல் தேதியில் ஊதியம்! கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலையா் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத... மேலும் பார்க்க

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்பு! - முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வா் மு... மேலும் பார்க்க

அக்‌ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.மகாபாரதத்தில் கிருஷ்... மேலும் பார்க்க

86,000 பேருக்கு மனை பட்டா: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு மனைப் பட்டா வழங்க வகை செய்யும் திருத்தங்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முட... மேலும் பார்க்க