நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
முன்னாள் படைவீரா் வாரிசுதாரா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படை வீரா்களின் 16 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் வாரிசுதாரா்களுக்கு தேனி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர ஆா்வமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட திறன் வளா்ப்பு பயிற்சி அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.