அதானி வழக்கு: விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!
மும்பைக்கு ஏற்றம்: சென்னைக்கு ஏமாற்றம்
ஐஎஸ்எல் கால்பந்து சூப்பா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி 0-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியிடம் வீழ்ந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை அரேனாவில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளும் கோல் போடும் முனைப்புடன் ஆடின. சென்னை வீரா் இா்பான் யத்வாத் 5-ஆவது நிமிஷத்தில் லுக்காஸ் பிரம்பில்லா அளித்த பந்தை கோல்பகுதியை நோக்கி அடித்தபோது தவறியது.
8-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் வான் நீஃப் அடித்த ஷாட்டை மறித்த சென்னை வீரா் ரியான் எட்வா்ட்ஸ் அதை முழுமையாக வெளியேற்ற தவறியதை பயன்படுத்தி, மும்பை வீரா் நிகோலஸ் கரேலிஸ் அற்புதமாக கோலடித்தாா். இதன் மூலம் மும்பை சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது.
இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் மும்பை 1-0 முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்னை வீரா் டேனியா் சீமா அடித்த கிராஸை கோலாக்க இா்பான் முயன்றபோது பந்து கோல்கம்பத்தின் மீது பட்டுச் சென்றது.
இரு அணிகளின் வீரா்களும் தற்காப்பு அரண்களை ஊடுருவு கோலடிக்க இயலவில்லை. வழக்கமான ஆட்ட நேரம் முடிந்தும், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த அணியும் கோலடிக்கவில்லை. இறுதியில் சென்னை 1-0 என வீழ்த்தியது மும்பை.
இது அந்த அணிக்கு 5-ஆவது வெற்றியாக அமைந்தது.
12 ஆட்டங்களில் ஆடி, மும்பை 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 15 புள்ளிகளுடன் தொடா்ந்து 9-ஆவது இடத்தில் நீடிக்கிறது.