நானும் ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல!...
மும்பையில் மோனோரயில் விபத்து: பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்!
மும்பை: மும்பையில் மோனோரயில் ஒன்று நடுவழியில் நின்றதால் அதில் சென்ற பயணிகள் வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று(ஆக. 19) மாலை கனமழைக்குமிடையில் இயக்கப்பட்ட மோனோரயில் ஒன்று பாதி வழியில் நின்றது. மின் தடை பிரச்சினையால் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ரயிலில் சுமார் 100 பயணிகள் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் ரயிலிருக்கும் பயணிகளை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டுளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.