மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது.