பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
மும்பை: மூத்த மகள் மீது மட்டும்தான் பாசமா... தாயைக் கொன்ற இளைய மகள்; நடந்தது என்ன?
மும்பை குர்லாவில் உள்ள குரேஷி நகரில் வசிப்பவர் ரேஷ்மா காசி (41). இவரது தாயார் சபீரா பானு. இவர் மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் தனது மகனோடு தங்கி இருக்கிறார். சபீரா பானு தனது இளைய மகள் ரேஷ்மாவைப் பார்க்க குர்லாவிற்கு வந்தார்.
வீட்டில் ரேஷ்மா தனது தாயாரிடம், மூத்த மகள் மீதுதான் அதிக பாசம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் சமையல் அறைக்குள் சென்ற ரேஷ்மா அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாயாரைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டார்.
கொலை செய்த பிறகு நேராக போலீஸ் நிலையத்திற்குச் சென்று தனது தாயாரைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தார். உடனே போலீஸார் ரேஷ்மாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அங்கு சபீரா பானு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து ரேஷ்மாவை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குமூலம் வாங்கினர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...