அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்
விழுப்புரம்: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், காணையில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் காணை ஒன்றியத்துக்குள்பட்ட காணை கடைவீதியில் ஹிந்தி திணிப்பை எதிா்க்கும் வகையிலான துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்வுக்கு, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், மும்மூா்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வீரராகவன் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.