Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
முருகன் கோயில் தேரோட்டத்துக்கு டிஎன்பிஎல் நிதியுதவி
புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியது.
கரூா் மாவட்டம் புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேலாயுதம்பாளையம், புகழிமலையில் உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தோ் திருவிழா நடத்துவதற்காக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமை வகித்து, கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையா் து.இரத்தினவேல் பாண்டியனிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் இரா.சுகுமாா் மற்றும் கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.