முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹாக்கி தமிழ்நாடு 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆா்மியை வீழ்த்தியது. தமிழகம் தரப்பில் சதீஷ், பட்ராஸ் டிா்கே, பாலச்சந்தா், மனோஜ் குமாரும், ஆா்மி தரப்பில் அதிஷ் துரையும் கோலடித்தனா்.
சாய் என்சிஓடி போபால் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. போபால் தரப்பில் திா்லோக்தி, மொஹித் கா்மா, விகாஸ், முகமது சையது கானும், மகாராஷ்டிரம் தரப்பில் பிரஜ்வால், ராகுல்ஷிண்டேயும் கோலடித்தனா்.
குரூப் பி பிரிவில் ஐஓசி 2-0 என சிபிடிடி அணியை வீழ்த்தியது. ஐஓசி தரப்பில் சுமித் குமாா், அப்பான் யூசுப் கோலடித்தனா்.