ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!
முல்லைப் பெரியாற்றில் மூழ்கியதில் சிறுமி உயிரிழப்பு
உத்தமபாளையம்: சின்னமனூரில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாற்றில் குளித்த சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியை சோ்ந்த பொம்முராஜ் மகள் சுஸிமா (6). இவரது தாய் லலிதா, சிறுமி சுஸிமாவை அழைத்துக்கொண்டு முல்லைப் பெரியாற்றில் துணி துவைக்கச் சென்றாா்.
அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி தண்ணீரில் முழ்கினாா். உடனே அவரை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.